/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வெவ்வேறு இடங்களில் ௩ பேர் விபரீத முடிவு வெவ்வேறு இடங்களில் ௩ பேர் விபரீத முடிவு
வெவ்வேறு இடங்களில் ௩ பேர் விபரீத முடிவு
வெவ்வேறு இடங்களில் ௩ பேர் விபரீத முடிவு
வெவ்வேறு இடங்களில் ௩ பேர் விபரீத முடிவு
ADDED : ஜூன் 09, 2024 04:26 AM
ஈரோடு: ஈரோட்டை அடுத்த லக்காபுரம் காளியம்மன் கோவில் பகுதியை சேர்ந்தவர் முரளி, 34, பெயிண்டர். திருமணமாகி ஒரு மகள், மகன் உள்ளனர். முரளிக்கு தீவிர குடிப்பழக்கம் இருந்தது. இரு வாரங்களுக்கு முன் ஏற்பட்ட தகராறில் மனைவி சந்தியா கோபித்து கொண்டு, தாய் வீட்டுக்கு குழந்தைகளுடன் சென்று விட்டார். மனவேதனையில் இருந்த முரளி நேற்று முன்தினம் வீட்டில் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
* ஈரோடு, பெரியசேமூர், வேலன் நகர் 40 அடி சாலையை சேர்ந்த சிவக்குமார் மனைவி முருகேஸ்வரி, 34; குழந்தை இல்லாததால் மனவேதனையில் இருந்தார். கடந்த, 6ம் தேதி துாக்கிட்டு கொண்டதில் இறந்தார்.
* அந்தியூர், பச்சாம்பாளையத்தை சேர்ந்தவர் செல்வராஜ், 45; கோவையில் டிப்பர் லாரி டிரைவராக பணிபுரிந்தார். போதிய சம்பளம் இல்லாததால், சில நாட்களுக்கு முன் வீட்டிற்கு வந்தார். டிப்பர் லாரி உரிமையாளர், அவரது உரிமத்தை தராமல் இருந்துள்ளார். இதனால் மன வேதனையில் இருந்த செல்வராஜ், பூச்சிக்கொல்லி மருந்தை குடித்து விட்டார். மேல் சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட நிலையில் இறந்தார்.