/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ குமுதா பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை குமுதா பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை
குமுதா பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை
குமுதா பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை
குமுதா பள்ளி மாணவன் நீட் தேர்வில் சாதனை
ADDED : ஜூன் 09, 2024 04:00 AM
நம்பியூர்: நம்பியூர் - குமுதா மெட்ரிக் பள்ளியில், ஒன்றாம் வகுப்பு தொடங்கி சமச்சீர் பாடத்திட்டத்திலேயே பயின்று, நீட் தேர்வில் முதல் முயற்சியிலேயே, 720க்கு, 659 மதிப்பெண் பெற்று, மாணவன் நவீன் சாதனை படைத்துள்ளார்.
இவர், 2023--24ம் ஆண்டு பிளஸ் 2 பொதுத்தேர்வில், 590 மதிப்பெண்; பிளஸ் 1 தேர்வில், 591 மதிப்பெண்; 10ம் வகுப்பு தேர்வில், 498 மதிப்பெண்களும் பெற்றவர். நீட் தேர்வில் அசத்திய நவீன், ஜே.ஈ.ஈ., மெயின் தேர்வில், 94 சதவீதம் பெற்று, ஜே.இ.இ., தேர்வு முடிவுகளுக்காக காத்துள்ளார். இந்த மாணவன் கல்வி ஊக்கத் தொகையாக, 3.௩௧ லட்சம் ரூபாய் பெற்றுள்ளார். இப்பள்ளி மாணவி பீனா கிரேஸ், 592 மதிப்பெண் பெற்றுள்ளார்.
நீட் தேர்வில் சாதனை படைத்த மாணவர்களை, பள்ளி தாளாளர் ஜனகரத்தினம், துணை தாளாளர் சுகந்தி ஜனகரத்தினம், செயலர் அரவிந்தன், இணை செயலர் டாக்டர் மாலினி அரவிந்தன், விளையாட்டு இயக்குனர் பாலபிரபு, முதல்வர் மஞ்சுளா, துணை முதல்வர் வசந்தி, ஆசிரியர்கள் பாராட்டி வாழ்த்தினர்.