/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ சென்னிமலை அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 'அலை கூட ஓயும்; வெறிநாய் வேட்டை ஓயாது?' சென்னிமலை அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 'அலை கூட ஓயும்; வெறிநாய் வேட்டை ஓயாது?'
சென்னிமலை அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 'அலை கூட ஓயும்; வெறிநாய் வேட்டை ஓயாது?'
சென்னிமலை அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 'அலை கூட ஓயும்; வெறிநாய் வேட்டை ஓயாது?'
சென்னிமலை அருகே நாய்கள் கடித்து 7 ஆடுகள் பலி 'அலை கூட ஓயும்; வெறிநாய் வேட்டை ஓயாது?'
ADDED : செப் 19, 2025 01:32 AM
சென்னிமலை, சென்னிமலை யூனியன் முகாசிப்பிடாரியூர் ஊராட்சி சென்னியங்கிரி வலசை சேர்ந்த விவசாயி புவனேஸ்வரி என்கிற கவிதா, 35; தோட்டத்தில் பட்டி அமைத்து செம்மறி ஆடுகள் வளர்த்து வருகிறார். நேற்று முன்தினம் இரவு வழக்கம் போல் பட்டியில் ஆடுகளை அடைத்து சென்றார். நள்ளிரவில் கம்பி வேலிக்குள் நுழைந்த மூன்றுக்கும் மேற்பட்ட தெருநாய்கள், ஆடுகளை சுற்றி வளைத்து கடித்து வெறியாட்டம் போட்டன.
இதில் ஏழு ஆடுகள் பலியாக, ௨௨ ஆடுகள் படுகாயம் அடைந்தன. நேற்று காலை பட்டிக்கு சென்றவர், பலியாகி கிடந்த ஆடுகளை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். சென்னிமலை பகுதியில் தெருநாய்கள் வெறியாட்டம் ஓயாதது கால்நடை வளர்ப்போர் மத்தியில் அச்சத்தை அதிகப்படுத்தியுள்ளது. கடந்த வாரம் இதே ஊரில் தெருநாய்கள் கடித்து ஆறு ஆடுகள் பலியாகின. வாய்ப்பாடி கால்நடை உதவி மருத்துவர் கோபு, நாய்களால் கடிபட்ட, 22 ஆண்டுகளுக்கு சிகிச்சை அளித்தார். வருவாய் துறையினரும் ஆய்வு நடத்தினர்.வெள்ளகோவில் அருகே...
வெள்ளகோவில், அகலப்பாளையம்புதுார் பொட்டிகாட்டு தோட்டத்தை சேர்ந்த விவசாயி கோவிந்தராஜ், 55; தோட்டத்தில் பட்டி அமைத்து, 30 செம்மறி ஆடு வளர்த்து வருகிறார். நேற்று காலை பட்டிக்கு சென்றபோது, நான்கு ஆடுகள் இறந்தும், மூன்று ஆடுகள் படுகாயத்துடனும் கிடந்தன. வெள்ளகோவில் போலீசார், கால்நடை துறை மருத்துவருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடற்கூறு பரிசோதனையில், தெருநாய் கடித்து பலியானது தெரிய வந்தது. இறந்த ஆடுகளுக்கு உடனடி நிவாரணம் வழங்க அமைச்சர் சாமிநாதனிடம் விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர்.