/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ நண்பனின் நகையை லவட்டி போதையால் சிக்கிய வாலிபர் நண்பனின் நகையை லவட்டி போதையால் சிக்கிய வாலிபர்
நண்பனின் நகையை லவட்டி போதையால் சிக்கிய வாலிபர்
நண்பனின் நகையை லவட்டி போதையால் சிக்கிய வாலிபர்
நண்பனின் நகையை லவட்டி போதையால் சிக்கிய வாலிபர்
ADDED : செப் 19, 2025 01:32 AM
கோபி, கோபி அருகே மொடச்சூரை சேர்ந்தவர் சுரேஷ், 44, மீன் கடை வியாபாரி; நண்பர்களான ஜெகதீஸ், 32, பரமேஸ்வரன், 35, கவுரிசங்கர், 36, ஆகியோருடன், கோபி அருகே நாதிபாளையத்தில் கீழ்பவானி வாய்க்காலில் குளித்தார். அப்போது இரண்டே கால் பவுன் தங்கச்சங்கிலியை பைக் பெட்ரோல் டேங்க் கவரில் வைத்து சென்றார்.
குளித்து முடித்து பின் சுரேஷ் பார்த்தபோது, தங்க சங்கிலி காணவில்லை. உடன் வந்த நண்பர்களிடம் கேட்டபோது தாங்கள் எடுக்கவில்லை என கூறியுள்ளனர். இந்நிலையில் கடந்த, 17ம் தேதி டாஸ்மாக் கடைக்கு, கவுரிசங்கரும், ஜெகதீசும் மது குடிக்க சென்றனர். அப்போது சுரேசின் தங்க செயினை, தான் திருடியதாக கவுரிசங்கரிடம் ஜெகதீஸ் உளறியுள்ளார். இதுகுறித்து கவுரிசங்கர் தெரிவித்த தகவலின் படி, கோபி போலீசில் சுரேஷ் நேற்று புகாரளித்தார். விசாரித்தை போலீசார் ஜெகதீசை கைது செய்து, நகையை மீட்டனர்.