/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபி வழியாக நீலகிரிக்கு சென்ற இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு கோபி வழியாக நீலகிரிக்கு சென்ற இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு
கோபி வழியாக நீலகிரிக்கு சென்ற இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு
கோபி வழியாக நீலகிரிக்கு சென்ற இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு
கோபி வழியாக நீலகிரிக்கு சென்ற இ.பி.எஸ்.,சுக்கு உற்சாக வரவேற்பு
ADDED : செப் 24, 2025 01:14 AM
கோபி நீலகிரி மாவட்டத்தில் 'மக்களை காப்போம்; தமிழகத்தை மீட்போம்' நிகழ்ச்சியில் பங்கேற்க, சேலத்தில் இருந்து கார் மூலம் கோபி, சத்தியமங்கலம் வழியாக, அ.தி.மு.க., பொது செயலர் இ.பி.எஸ்., காரில் நேற்று புறப்பட்டார்.
ஈரோடு மாவட்டம் கோபி பஸ் ஸ்டாண்டை காலை, 7:10 மணிக்கு அடைந்த இ.பி.எஸ்.,சுக்கு, அ.தி.மு.க., புறநகர் மேற்கு மாவட்ட பொறுப்பாளர் செல்வராஜ் பூங்கொத்து கொடுத்து வரவேற்றார். அப்போது எம்.எல்.ஏ.,க்கள் கருப்பணன், ஜெயக்குமார், முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் ரமணீதரன், ராஜா கிருஷ்ணன் உட்பட நிர்வாகிகள் உடனிருந்தனர். இ.பி.எஸ்.,ஐ காண, ஏராளமானோர் குவிந்திருந்தனர். இதனால் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் அரை மணி நேரம் போக்குவரத்து பாதித்தது. மாற்று வழியில் வாகனங்கள் திருப்பி விடப்பட்டன. கோபியில் இருந்து, 7:40 மணிக்கு இ.பி.எஸ்., கார் சென்றது.
கட்சி பொறுப்புகளிகள் இருந்து செங்கோட்டையன் நீக்கப்பட்டதால், அவரது மாவட்டத்துக்கு உட்பட்ட பகுதி வழியாக, இ.பி.எஸ்., செல்வதால், கட்டாயம் கூட்டம் சேர்க்க வேண்டும் என்ற நிலைக்கு, கட்சியின், ஈரோடு மேற்கு மாவட்ட பொறுப்பாளர் தள்ளப்பட்டார். அதன் எதிரொலியாக கிராம பகுதியில் இருந்து பலரையும் அழைத்து வந்து கூட்டம் சேர்த்து, இ.பி.எஸ்.,க்கு வரவேற்பு அளித்தனர்.
கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கப்பட்டிருந்தாலும், தொகுதிக்குள் இருந்தால், இ.பி.எஸ்.,சை வரவேற்க வேண்டியிருக்கும் என்பதால், முன்னாள் அமைச்சரும் கோபி எம்.எல்.ஏ.,வுமான செங்கோட்டையன், நேற்று முன்தினம் அதிகாலையே, சென்னைக்கு சென்று விட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.