/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றி; மாணவிகளுக்கு பாராட்டு முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றி; மாணவிகளுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றி; மாணவிகளுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றி; மாணவிகளுக்கு பாராட்டு
முதல்வர் கோப்பை விளையாட்டில் வெற்றி; மாணவிகளுக்கு பாராட்டு
ADDED : செப் 24, 2025 01:14 AM
ஈரோடு :ஈரோடு மாவட்ட அளவிலான முதல்வர் கோப்பை விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு, அரசு பள்ளியில் பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
சில தினங்களுக்கு முன் தமிழக முதல்வர் கோப்பைக்கான மாவட்ட அளவிலான விளையாட்டு போட்டி நடந்தது. இதில் ஈரோடு ப.செ.பார்க் அரசு மகளிர் மாதிரி மேல்நிலை பள்ளி மாணவிகள், வாலிபால், கேரம், சிலம்பம் ஆகிய போட்டிகளில் தங்க பதக்கம் வென்றனர்.
பதக்கம் வென்ற, 37 மாணவிகளுக்கும் பள்ளியில் நேற்று பாராட்டு தெரிவிக்கப்பட்டது. பள்ளி ஆசிரியைகளும் கேரம் போட்டியில் வெள்ளி பதக்கம் வென்றனர்.