மாவட்ட சிறையில் விழிப்புணர்வு முகாம்
மாவட்ட சிறையில் விழிப்புணர்வு முகாம்
மாவட்ட சிறையில் விழிப்புணர்வு முகாம்
ADDED : ஜூன் 12, 2025 01:27 AM
கோபி,
கோபியில் உள்ள மாவட்ட சிறையில், சுகாதாரத்துறை சார்பில், காசநோய் ஒழிப்பு, புகையிலை எதிர்ப்பு விழிப்புணர்வு முகாம் நடந்தது.
மாவட்ட நலக்கல்வியாளர் சிவக்குமார், சமூக சேவகர் சங்கீதா, மாவட்ட சிறை கண்காணிப்பாளர் சிவன் உட்பட பலர் பங்கேற்றனர். காசநோய் பரவும் விதம், நுரையீரல் காச நோயின் அறிகுறிகள், அதன் பாதிப்புகள், பரிசோதனை முறை, சிகிச்சை கிடைக்கும் இடங்கள், நடமாடும் எக்ஸ்ரே வாகனத்தின் பயன்கள். புற்றுநோய் பாதிப்புகள் என முகாமில் விழிப்புணர்வு ஏற்படுத்தினர். முகாமில், 180 கைதிகள் பங்கேற்றனர்.