/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மரவள்ளி பயிருக்கு தனி வாரியம் கேட்டு முதல்வரிடம் மனு வழங்கல் மரவள்ளி பயிருக்கு தனி வாரியம் கேட்டு முதல்வரிடம் மனு வழங்கல்
மரவள்ளி பயிருக்கு தனி வாரியம் கேட்டு முதல்வரிடம் மனு வழங்கல்
மரவள்ளி பயிருக்கு தனி வாரியம் கேட்டு முதல்வரிடம் மனு வழங்கல்
மரவள்ளி பயிருக்கு தனி வாரியம் கேட்டு முதல்வரிடம் மனு வழங்கல்
ADDED : ஜூன் 12, 2025 01:27 AM
ஈரோடு, ஈரோடு மாவட்டம், விஜயமங்கலம் அருகே வேளாண் கண்காட்சி திறப்பு விழாவுக்கு வருகை தந்த முதல்வர் ஸ்டாலினிடம், தமிழ்நாடு சிறு மற்றும் குறு விவசாயிகள் சங்க மாநில தலைவர் சுதந்திரராசு மனு வழங்கினார்.
அதில் கூறியிருப்பதாவது:
மரவள்ளி கிழங்குக்கு விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளதால், அதனை தடுக்கவும் விவசாயிகளுக்கு உரிய விலை கிடைக்கவும், மரவள்ளி பயிருக்கு என தனி வாரியம் அமைக்க வேண்டும். ஈரோட்டை தலைமையிடமாக கொண்டு, மஞ்சள் வாரிய பிரிவை அமைக்க வேண்டும். கீழ்பவானி பாசன பகுதியில் உள்ள, 44 பாசன சபைக்குமான நிர்வாகிகள், விவசாயிகளால் தேர்ந்தெடுக்கும் வகையில் தேர்தல் நடத்த வேண்டும்.
கடந்த, அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் அமைக்கப்பட்ட, ஈரோடு மாவட்ட வேளாண் விற்பனை உற்பத்தி குழுவை மாற்றி அமைக்க வேண்டும். சென்னிமலையை தலைமையிடமாக கொண்டு புதிய தாலுகா ஏற்படுத்த வேண்டும். மொடக்குறிச்சியில் பத்திரப்பதிவு அலுவலகம், டி.எஸ்.பி., அலுவலகம் அமைக்க வேண்டும். வருவாய் துறையில் உள்ள கிராம பஞ்.,களையும், கிராமத்தையும் ஒரே பெயரில் பதிவு செய்திருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒவ்வொரு பஞ்.,களிலும் சேமிப்பு கிடங்கு, உலர் களம் ஏற்படுத்த வேண்டும்.
இவ்வாறு தெரிவித்துள்ளார்.