/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மையே சேவை நிகழ்ச்சி ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மையே சேவை நிகழ்ச்சி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மையே சேவை நிகழ்ச்சி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மையே சேவை நிகழ்ச்சி
ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில் துாய்மையே சேவை நிகழ்ச்சி
ADDED : செப் 25, 2025 01:56 AM
ஈரோடு, ஈரோடு மாநகராட்சி அலுவலகத்தில், துாய்மையே சேவை நிகழ்ச்சி நேற்று நடந்தது.
ஆணையர் அர்பித்ஜெயின் தலைமை வகித்தார். துணை ஆணையர் தனலட்சுமி முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியின் போது, ஈரோடு மாநகராட்சியை குப்பை இல்லா மாநகராட்சியாக மாற்ற வேண்டும். பிளாஸ்டிக் ஒழிப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். மீண்டும் மஞ்சப்பை திட்டத்தை மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். போதை பொருட்கள் பயன்பாட்டை தடுக்க வேண்டும் என்பன போன்றவை குறித்து அதிகாரிகள் அறிவுறுத்தினர்.
இதையடுத்து, திடக்கழிவு மேலாண்மை பணியில் சிறப்பாக பணியாற்றிய துாய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு பதக்கம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்கி கவுரவிக்கப்பட்டது. அதேபோல், விழிப்புணர்வு நிகழ்ச்சி, பேரணி, மாஸ் கிளீனிங் என பல்வேறு பணிகள் மூலம் ஒத்துழைப்பு வழங்கிய தன்னார்வ தொண்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கப்பட்டது.
சுகாதார அலுவலர்கள் ஜாகீர் உசேன், தங்கராஜ், பூபாலன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.