நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம்
ADDED : செப் 25, 2025 01:55 AM
ஈரோடு :ஈரோட்டில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் மாவட்ட இளைஞரணி சார்பில், வணிகர் நலவாரிய உறுப்பினர் சேர்க்கை முகாம் நடந்தது.
மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் லாரன்ஸ் ரமேஷ் தலைமை வகித்தார். மாநில இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் சண்முகவேல், கோவை மண்டல இளைஞரணி ஒருங்கிணைப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்து, உறுப்பினர்களை சேர்த்தனர். தினசரி மார்க்கெட்டில் வணிகம் செய்யும், 100க்கும் மேற்பட்டவர்கள் நலவாரியத்தில் இணைந்தனர். நலவாரிய பயன்கள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. நிர்வாகி கள் ரியாஸ்அகமது, தங்கராஜ், தமிழரசன் உட்பட பலர் பங்கேற்றனர்.