ADDED : செப் 26, 2025 01:27 AM
தாராபுரம், தாராபுரம் தாசில்தார் அலுவலக வளாகத்தில், தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் சங்க மாவட்ட தலைவர் காளிமுத்து, தமிழ்நாடு கிராம நிர்வாக அலுவலர் முன்னேற்ற சங்க நிர்வாகி சுந்தரபாண்டியன் முன்னிலையில், நேற்று மாலை காத்திருப்பு போராட்டம்
நடந்தது.
உரிய திட்டமிடலின்றி, பல சிறப்பு திட்டங்கள், எங்கள் துறை மீது திணிக்கப்பட்டுள்ளது. இதனால் அலுவலர்கள் மன அழுத்தத்துக்கு ஆளாகியுள்ளனர். உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தில் குறைந்தபட்ச கால அவகாசம் கூட வழங்காமல், ஒரே நாளில் பணிகளை முடிக்க நிர்ப்பந்திப்பது, திட்டத்தை நிறைவேற்றுவதில் பின்னடைவை ஏற்படுத்துகிறது எனக்கூறி, 50க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.