/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ வாக்குறுதி நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் மறியல் வாக்குறுதி நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் மறியல்
வாக்குறுதி நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் மறியல்
வாக்குறுதி நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் மறியல்
வாக்குறுதி நிறைவேற்றக்கோரி மின்வாரிய ஊழியர்கள் மறியல்
ADDED : செப் 24, 2025 01:15 AM
ஈரோடு :தி.மு.க., தேர்தல் வாக்குறுதி, 143ன்படி மின்சார வாரியத்தில், 10 ஆண்டுகளாக பணிபுரியும் ஒப்பந்த தொழிலாளர்களை அடையாளம் கண்டு நிரந்தரப்படுத்த வேண்டும்.
பிரிவுக்கு, 2 பேரை கள உதவியாளராக ஒப்பந்தம் மூலம் நியமனம் செய்யும் முடிவை கைவிட்டு, வாரியமே ஒப்பந்த ஊழியர்களை நியமித்து நேரடியாக தினக்கூலி வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, ஈரோட்டில் ஈ.வி.என்., சாலையில் உள்ள மின்வாரிய மேற்பார்வை பொறியாளர் அலுவலகம் முன், தமிழ்நாடு மின் ஊழியர் மத்திய அமைப்பு - சி.ஐ.டி.யு., சார்பில் நேற்று மறியலில் ஈடுபட்டனர்.
மாநில செயலர் பி.ஸ்ரீதேவி தலைமை வகித்தார். ஈரோடு கிளை தலைவர் ஜோதிமணி, கிளை பொருளாளர் விஸ்வநாதன், மாவட்டக்குழு உறுப்பினர் சுந்தர்ராஜன் கோரிக்கை குறித்து பேசினர். மறியலில் ஈடுபட்ட, 34 பேரையும் போலீசார் கைது செய்தனர்.