Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தீயணைப்பு துறை மண்டல விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற ஈரோடு

தீயணைப்பு துறை மண்டல விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற ஈரோடு

தீயணைப்பு துறை மண்டல விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற ஈரோடு

தீயணைப்பு துறை மண்டல விளையாட்டு ஒட்டுமொத்த சாம்பியன் பெற்ற ஈரோடு

ADDED : பிப் 02, 2024 10:22 AM


Google News
ஈரோடு: தீயணைப்பு துறையின், மண்டல விளையாட்டு போட்டிகளில் அனைத்திலும் முதலிடம் பிடித்து ஈரோடு மாவட்ட வீரர்கள் சாம்பியன் பட்டத்தை வென்றனர்.

தீயணைப்பு மற்றும் மீட்பு துறை வீரர்களுக்கான, மண்டல அளவிலான விளையாட்டு போட்டி திண்டுக்கல்லில் கடந்த, 29 முதல், 31 வரை நடந்தது. ஈரோடு, திருப்பூர், திண்டுக்கல், கோவை-நீலகிரி ஒரு பிரிவாகவும், சேலம், தர்மபுரி, நாமக்கல், கிருஷ்ணகிரி மாவட்டங்கள் மற்றொரு பிரிவு என, 500க்கும் மேற்பட்ட தீயணைப்பு துறை வீரர்கள் தங்கள் திறமைகளை வெளிகாட்டினர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள, 11 தீயணைப்பு நிலையத்தில் இருந்து, 29 வீரர்கள் கலந்து கொண்டனர். தீயணைப்பு துறை சார்ந்த நீர் விடு குழாய் போட்டி, ஏணி போட்டி, நீச்சல் போட்டி, நீர் தாங்கி வண்டி போட்டி, கயிறு ஏறுதல், சீருடை வேகமாக அணிதல் உள்ளிட்ட போட்டிகள் நடந்தது. இதில், நீர் விடு குழாய் போட்டியில் ஈரோடு மாவட்ட அணி முதலிடம் பிடித்தது. ஓட்ட போட்டி, நீளம் மற்றும் உயரம் தாண்டுதல், குண்டு ஏறிதல் மற்றும் வாலிபால், கூடைபந்து உள்ளிட்ட அனைத்து போட்டிகளிலும், ஈரோடு மாவட்ட வீரர்கள் முதலிடம் பிடித்து சாம்பியன் பட்டத்தை வென்று, மாநில போட்டிக்கு தகுதி பெற்றுள்ளனர்.

இத்தகவலை, ஈரோடு மாவட்ட தீயணைப்பு அலுவலர் புளுகாண்டி தெரிவித்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us