ADDED : செப் 24, 2025 01:13 AM
ஈரோடு :தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில், ஈரோடு மாவட்ட தலைவர் ரமேஷ் தலைமையில், ஈரோடு தாலுகா அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டம் நடந்தது. நிர்வாகிகள் ராக்கிமுத்து, சசிகலா, சுரேஷ், விஜயமனோகரன் கோரிக்கை குறித்து பேசினர்.
ஓய்வூதிய நிதி ஆணையத்தை களைந்திட வேண்டும். என்.பி.எஸ்., - யூ.பி.எஸ்., திட்டத்தில் செலுத்தப்பட்ட தொகைகளை அந்தந்த மாநிலங்களிடம் ஒப்படைக்க வேண்டும். அனைத்து சந்தாதாரர்களையும் இ.பி.எஸ்.,-95ன் கீழ் வரையறுக்கப்பட்ட ஓய்வூதியத்தில் கொண்டு வர வேண்டும். எட்டாவது ஊதியக்குழுவை அமைக்க வேண்டும்.
ஐந்தாண்டுகளுக்கு ஒரு முறை ஊதிய மாற்றம் என்பதை உறுதிப்படுத்த வேண்டும். பறிக்கப்பட்ட தொழிலாளர் நலச்சட்டங்களை திரும்ப வழங்க வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.