ADDED : செப் 24, 2025 01:13 AM
ஈரோடு :ஈரோடு மாவட்டத்தில் அரசு, அரசு நிதியுதவி பெறும் தொடக்க, நடுநிலை பள்ளிகளில் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு, கற்றல் தொடர்பாக பயிற்சி நுால் மற்றும் ஒன்று முதல் மூன்றாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர், 4, 5ம் வகுப்பு ஆசிரியர்களுக்கான கையேடு, ஈரோடு ப.செ.பார்க்கில் உள்ள அனைவருக்கும் கல்வி இயக்கம் அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்தது.
இவை மாவட்டத்தில் உள்ள வட்டார வள மையங்களுக்கு வேனில் நேற்று அனுப்பி வைக்கப்பட்டது. மொத்தம் 72,180 பயிற்சி நுால், கையேடு வட்டார வள மைய அலுவலகம் மூலம் பள்ளிகளில் வரும் நாட்களில் வினியோகம் செய்யப்பட உள்ளது. காலாண்டு விடுமுறைக்கு பின் பள்ளி திறந்தவுடன் மாணவர்கள், ஆசிரியர்களுக்கு வழங்கப்படும்.