/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கல் காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கல்
காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கல்
காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கல்
காலைக்கதிர் முகவர் குடும்ப விழா கோலாகலம் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கல்
ADDED : அக் 12, 2025 03:08 AM
ஈரோடு: காலைக்கதிர் முகவர்கள் குடும்ப விழா நேற்று ஈரோட்டில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. அதில் ஈரோடு, கரூர் மாவட்ட முகவர்கள் குடும்பத்தினருடன் பங்கேற்றனர். அவர்க-ளுக்கு வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது.
மக்களின் மன சாட்சியாக உள்ள காலைக்கதிர் நாளிதழ் தொடர்ந்து வெற்றி நடை போட்டு வருகிறது. இந்த வெற்றியின் பின்னணியில் காலைக்கதிர் நாளிதழை மக்களிடம் கொண்டு சேர்க்கும் முகவர்களின் உழைப்பை சிறப்பிக்கும்படி முகவர்கள், 'குடும்ப விழா-2025' ஈரோடு முனிசிபல் காலனி சுப்பிரமணிய கவுண்டர் மஹால் திருமண மண்டபத்தில் நேற்று கொண்டாடப்-பட்டது.முதலில் வந்த முகவர்களின் இல்லத்தரசிகள், 5 பேர் குத்து-விளக்கு ஏற்றி விழாவை துவக்கி வைத்தனர். தொடர்ந்து காலைக்-கதிர் வெள்ளி நாணயத்தை அதன் ஆசிரியர் ராமச்சந்திரன், பொது மேலாளர் ஜெரால்டு வெளியிட, விற்பனை மேலாளர் செந்தில்-குமார் பெற்று கொண்டார்.
தொடர்ந்து சிறப்பு அமர்வில் செல்வம் சேர்க்கலாம் வாங்க தலைப்பில் எழுத்தாளர் செல்வேந்திரன் பேசியதாவது:
அறத்துடன் கூடிய தொழில் பத்திரிக்கை. நாளிதழ்கள் ஆரம்பிக்-கப்பட்ட போது வியாபார நோக்கம் இல்லை. சுதந்திர போராட்-டத்தை மக்கள் தெரிந்து கொள்ளவே நாளிதழ்கள் துவங்கப்பட்-டன. இதில் முகவர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாக நாளிதழை மக்களிடம் சுதந்திர போராட்ட காலத்தில் சேர்த்தனர்.
'டிவி' சமூக ஊடகங்களில் வருவதை மக்கள் வதந்தியாக பார்க்கின்றனர். பொறுப்பு ஏற்கும் நாளிதழ்களை மக்கள் நம்புகின்-றனர். நம்பிக்கை, தரம், நிலைபாடு பார்த்து வாசகர்கள் நாளிதழை படிக்கின்றனர்.
அடுத்த, 6 மாத காலங்களில், 8 சதவீதம் வரை நாளிதழ்கள் விற்-பனை அதிகரிக்கும் என ஆய்வு முடிவுகள் சொல்கின்றன. விற்ப-னையில் தடைகளை பார்க்க கூடாது. வாய்ப்புகளை மட்டுமே பார்க்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து ஈரோடு,கரூர் மாவட்ட அனைத்து முகவர்களுக்கும் காலைக்கதிர் வெள்ளி நாணயம் பரிசாக வழங்கப்பட்டது. மேலும் முகவர் குடும்பத்தினருக்கு, தனித்தனியே புகைப்படங்களை அச்-சிட்டு பெற்று சென்றனர்.


