ADDED : அக் 12, 2025 02:08 AM
காங்கேயம்;போக்குவரத்து போலீசார் சார்பில், தலைக்கவசம் குறித்த விழிப்புணர்வு பேரணி, காங்கேயத்தில் நேற்று நடந்தது. இன்ஸ்பெக்டர் செல்வநாயகம், போக்குவரத்து எஸ்.ஐ., அருணகிரி துவக்கி வைத்தனர். இதில் தலைகவசம் அணிவதன் முக்கியதுவம் குறித்தும், கடைபிடிக்க வேண்டிய போக்குவரத்து விதிகள் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினர்.
காங்கேயம் பஸ் ஸ்டாண்ட் வரை பேரணி சென்றது. இதில் சட்டம் ஒழுங்கு போலீசார், போக்குவரத்து போலீசார், இருசக்கர வாகன ஓட்டிகள் என நுாற்றுக்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.


