/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ விவேகானந்தா கலை கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா - விவேகானந்தா கலை கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -
விவேகானந்தா கலை கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -
விவேகானந்தா கலை கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -
விவேகானந்தா கலை கல்லுாரியில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா -
ADDED : செப் 25, 2025 01:59 AM
திருச்செங்கோடு :திருச்செங்கோடு விவேகானந்தா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரியில், சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி பணிகள் திட்டம் சார்பில், 'போஷன் அபியான்'- தேசிய ஊட்டச்சத்து மாத விழா--2025 எனும், ஆரோக்கியமான பெண்கள், வலுவான குடும்பம் திட்ட நிகழ்ச்சி நடந்தது. விவேகானந்தா கல்வி நிறுவனங்கள் மற்றும் மருத்துவமனைகளின் சேர்மன் கருணாநிதி தலைமை வகித்தார். மாவட்ட திட்ட அலுவலர் போர்ஷியா ரூபி வரவேற்றார்.
முதன்மை நிர்வாகி சொக்கலிங்கம், கல்லுாரி முதல்வர்கள் பேபி ஷகிலா, ராஜேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நாமக்கல் மாவட்ட கலெக்டர் துர்காமூர்த்தி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார்.
அவர் பேசுகையில், ''மாணவியர், கல்வியுடன், இயற்கையோடு சேர்ந்து ஆரோக்கியமாக வாழக்கூடிய சரிவிகித உணவு பழக்கங்களை கடைப்பிடித்து ஊட்டச்சத்து குறைபாடு இன்றி ஆரோக்கியமாக வாழ வேண்டும். காலை நேர உணவை தவிர்த்தல் கூடாது,'' என்றார். தொடர்ந்து, அடுப்பில்லா சமையல் போட்டி, போஸ்டர் உருவாக்கும் போட்டி, மாறுவேட போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவியருக்கு சான்றிதழ் வழங்கப்பட்டது.