/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ 27ல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் நீண்ட இழுபறிக்கு பின் இடம் தேர்வு 27ல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் நீண்ட இழுபறிக்கு பின் இடம் தேர்வு
27ல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் நீண்ட இழுபறிக்கு பின் இடம் தேர்வு
27ல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் நீண்ட இழுபறிக்கு பின் இடம் தேர்வு
27ல் நாமக்கல்லில் விஜய் பிரசாரம் நீண்ட இழுபறிக்கு பின் இடம் தேர்வு
ADDED : செப் 25, 2025 01:59 AM
நாமக்கல், த.வெ.க., தலைவர் விஜய், பொதுமக்களை சந்தித்து பிரசாரம் செய்து வருகிறார். அதன்படி, வரும், 27 காலையில் நாமக்கல் நகரில் பிரசாரம் செய்வார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவர் பிரசாரம் செய்வதற்கு, நாமக்கல், பொய்யேரிக்கரை சாலையில் உள்ள மதுரைவீரன் கோவில் அருகே இடம் ஒதுக்கி தர வேண்டும் என, த.வெ.க., நிர்வாகிகள் போலீசாரிடம் வலியுறுத்தினர். நேற்று இடம் தேர்வு செய்வது தொடர்பாக, நாமக்கல் மாவட்ட எஸ்.பி., அலுவலகத்தில், த.வெ.க., நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினர்.
அப்போது, கூடுதல் எஸ்.பி., அண்ணாதுரை, பொய்யேரிக்கரை மதுரைவீரன் கோவில் அருகில், விஜய் பிரசாரம் செய்தால் போக்குவரத்து நெரிசல் ஏற்படும்; அதனால், சேலம் சாலையில் ஏதாவது இடத்தை தேர்வு செய்யுமாறு அறிவுறுத்தினார். ஆலோசனை கூட்டம், இரண்டு மணி நேரம் நீடித்தது. இருந்தும் விஜய் பிரசாரம் செய்யும் இடம் தேர்வாகவில்லை. இறுதியாக, த.வெ.க., நிர்வாகிகள் தங்களது தலைமையிடம் கேட்டு முடிவு தெரிவிப்பதாக தெரிவித்து சென்றனர்.
தொடர்ந்து, நேற்று மாலை போலீசார் அறிவுறுத்தலுக்கு இணங்க, த.வெ.க., நிர்வாகிகள் சேலம் சாலையில் உள்ள பழைய ஆர்.டி.ஓ., அலுவலகம் அருகில் இடத்தை தேர்வு செய்தனர். அந்த இடத்தில் விஜய் பிரசாரம் செய்ய போலீசார் அனுமதி அளித்தனர். இதற்கிடையில், பிரசாரம் செய்வதற்காக தேர்வு செய்யப்பட்ட இடத்தை, கட்சி பொதுச்செயலாளர் ஆனந்த், இன்று பார்வையிட்டு உறுதி செய்யவார் என, த.வெ.க., நிர்வாகிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.