/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம் இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்
இடைநிலை ஆசிரியர்கள் பேட்ச் அணிந்து போராட்டம்
ADDED : டிச 03, 2025 07:35 AM
சென்னிமலை:தமிழகத்தில் டெட் தேர்வில் தேர்ச்சி பெற்று, 2012ல் பணிக்கு சேர்ந்த இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியமாக, 5,200 ரூபாய் வழங்கப்படுகிறது.
அதேசமயம், 2009ல் பணியில் சேர்ந்தவர்களுக்கு, 8,370 ரூபாய் தரப்படுகிறது. அவர்களைப் போல் தங்களுக்கும் ஊதியம் வழங்க கோரி, கடந்த அ.தி.மு.க., ஆட்சி காலத்தில் இருந்து போராடி வருகின்றனர். இந்நிலையில், 2021ல் தி.மு.க. தனது தேர்தல் வாக்குறுதியில், சம வேலைக்கு சம ஊதியம் தருவதாக கூறியது. ஆனால் ஆட்சிக்கு வந்து நான்கரை ஆண்டுகள் நிறைவடைந்தும் வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என்று கூறி, இடைநிலை பதிவுமூப்பு ஆசிரியர் இயக்கம் சார்பில், நேற்று முதல் கோரிக்கை அட்டை அணிந்து எதிர்ப்பை தெரிவித்தனர். இதன்படி சென்னிமலை ஒன்றிய அரசு பள்ளிகளில் இடைநிலை ஆசிரியர்கள் கோரிக்கை அட்டை அணிந்து பணியாற்றினர். வரும், 5ம் தேதி சென்னையில், 20 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்களும் குடும்பத்துடன் கோட்டையை நோக்கி பேரணி நடத்தவும் முடிவு செய்துள்ளனர்.


