/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/தனி நபர் எதிர்ப்பால் பாலப்பணி நிறுத்தம் போலீஸ் பாதுகாப்புடன் முடிக்க கோரிக்கைதனி நபர் எதிர்ப்பால் பாலப்பணி நிறுத்தம் போலீஸ் பாதுகாப்புடன் முடிக்க கோரிக்கை
தனி நபர் எதிர்ப்பால் பாலப்பணி நிறுத்தம் போலீஸ் பாதுகாப்புடன் முடிக்க கோரிக்கை
தனி நபர் எதிர்ப்பால் பாலப்பணி நிறுத்தம் போலீஸ் பாதுகாப்புடன் முடிக்க கோரிக்கை
தனி நபர் எதிர்ப்பால் பாலப்பணி நிறுத்தம் போலீஸ் பாதுகாப்புடன் முடிக்க கோரிக்கை
ADDED : டிச 03, 2025 07:36 AM
சென்னிமலை:சென்னிமலை
யூனியன்- வாய்ப்பாடி ரயில்வே நுழைவுப்பாலம் தாழ்வான பகுதியில்
அமைந்துள்ளது. இதனால் மழை காலங்களில் தண்ணீர் தேங்கி, சென்னிமலை -
விஜயமங்கலம் இடையில் போக்குவரத்து கடுமையாக
பாதிக்கப்படுகிறது.
இதற்கு தீர்வாக சேலம் ரயில்வே கோட்டம்
சார்பில், மழைநீர் உள்ளே வராதபடி பாலத்தின் மீது கூரை அமைக்கும் பணி
தொடங்கப்பட்டது. இதற்காக மூன்று பக்கங்களிலும் துாண் அமைத்து பணி
நடக்கிறது. ஒரு பக்கத்தில் மட்டும் துாண் அமைக்க, அந்தப்பகுதியில்
கடை நடத்தி வரும் பெண் ஒருவர் எதிர்ப்பு தெரிவித்ததால் பணி
நிறுத்தப்பட்டுள்ளது.
இதனால் நீண்ட கால பிரச்னைக்கு தீர்வு
கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. போலீசாரின் உதவியுடன்
உடனடியாக பணியை முடித்து, நுழைவு பாலத்தில் தண்ணீர் தேங்கும்
பிரச்னைக்கு நிரந்தர தீர்வு ஏற்படுத்த, அப்பகுதி மக்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.க்கும்.


