/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ கோபியில் 91 பள்ளிகளை சேர்ந்த 237 ஆசிரியருக்கு பயிற்சி நிறைவு கோபியில் 91 பள்ளிகளை சேர்ந்த 237 ஆசிரியருக்கு பயிற்சி நிறைவு
கோபியில் 91 பள்ளிகளை சேர்ந்த 237 ஆசிரியருக்கு பயிற்சி நிறைவு
கோபியில் 91 பள்ளிகளை சேர்ந்த 237 ஆசிரியருக்கு பயிற்சி நிறைவு
கோபியில் 91 பள்ளிகளை சேர்ந்த 237 ஆசிரியருக்கு பயிற்சி நிறைவு
ADDED : ஜூன் 12, 2025 01:28 AM
கோபி, கோபி யூனியனில், 91 பள்ளிகளை சேர்ந்த, 237 இடைநிலை ஆசிரியர்களுக்கு, எண்ணும், எழு த்தும் குறித்த பயிற்சி நேற்றுடன் நிறைவு பெற்றது.
கோபி யூனியனில் உள்ள, 91 துவக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளை சேர்ந்த, இடை நிலை ஆசிரியர்களுக்கான, எண்ணும், எழுத்தும் குறித்த பயிற்சி, கோபி வட்டார வளமையத்தில் நேற்று முன்தினம் துவங்கியது. எழுதுதல், வாசித்தல், கணிதத்திறனை மேம்படுத்துதல் என மொத்தம் நான்கு கருத்தாளர்கள் மூலம், 118 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக நேற்று, 119 ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிக்கப்பட்டது. கருத்தாளரான ஆசிரியர் பயிற்றுனர்கள் திலகம், கணேசன், சென்னியங்கிரி, மணிகண்டன் ஆகியோர் பயிற்சி அளித்தனர். துவக்க நிலை ஆசிரியர்களுக்கு, நேற்றுடன் பயிற்சி நிறைவு பெற்றதாக அவர்கள் தெரிவித்தனர்.