/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி
மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி
மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி
மலை கோவில் பாதையில் 30 முதல் வாகனம் அனுமதி
ADDED : செப் 26, 2025 01:19 AM
சென்னிமலை :சென்னிமலையில் மலை மீது அமைந்துள்ள சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு செல்ல, ௪ கி.மீ., துாரத்துக்கு மலைப்பாதை சாலை உள்ளது. இதை சீரமைக்கும் பணி, 7 கோடி ரூபாய் செலவில், 2024 ஜூலை மாதம் தொடங்கியது.
இதில் மலைப்பாதை ஓரங்களில் வடிகால் அமைத்தல், 13 சிறு பாலங்கள் கட்டுதல் போன்ற பணி நடந்தது.
சமீபத்தில் அனைத்து பணிகளும் முடிந்தது. 24 அடி அகலத்தில் தார்ச்சாலை அமைக்கும் பணி கடந்த, 10ம் காலை தொடங்கியது. ௧7ம் தேதி நிறைவு பெறும் என கணிக்கப்பட்ட நிலையில், நாளை நிறைவு பெறும் என தெரிகிறது. இதையடுத்து பக்தர்களின் வாகனங்கள் செல்ல, 30ம் தேதி முதல் அனுமதிக்கப்படும் என தெரிகிறது.