/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/மயான வழி ஆக்கிரமிப்பு தீர்வு கிடைக்காமல் தவிப்புமயான வழி ஆக்கிரமிப்பு தீர்வு கிடைக்காமல் தவிப்பு
மயான வழி ஆக்கிரமிப்பு தீர்வு கிடைக்காமல் தவிப்பு
மயான வழி ஆக்கிரமிப்பு தீர்வு கிடைக்காமல் தவிப்பு
மயான வழி ஆக்கிரமிப்பு தீர்வு கிடைக்காமல் தவிப்பு
ADDED : செப் 26, 2025 01:20 AM
அந்தியூர், அந்தியூர் அருகே மைக்கேல்பாளையம் பஞ்., பொய்யேரிக்கரையில், மயானத்துக்கு செல்லும் பாதையை தனி நபர் ஆக்கிரமித்துள்ளார். இதை அகற்ற மூன்றாண்டுக்கு முன் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் இதுவரை அகற்றப்படாததால் மக்கள் பல்வேறு போராட்டங்கள் நடத்தி வருகின்றனர். ஆக்கிரமிப்பு நபருக்கு அந்தியூர் தாசில்தார் துணை போவதாகவும், முதல்வர் தனிப்பிரிவுக்கு மக்கள் புகாரளித்துள்ளனர்.
இந்நிலையில் ஆக்கிரமிப்பை அகற்ற வலியுறுத்தி, பொய்யேரிக்கரையிலிருந்து கம்யூ., தாலுகா செயலாளர் முருகேசன் தலைமையில் கோஷமிட்டபடி நடைபயணமாக கலெக்டரை சந்திக்க நேற்று சிலர் புறப்பட்டனர். போலீசார் தடுத்து நிறுத்தி போராட்டத்தை கைவிட வலியுறுத்தினர். போராட்டத்தை கைவிட்ட நிலையில், 40க்கும் மேற்பட்டோரை பஸ்ஸில் அழைத்து சென்று, கலெக்டரை சந்ததிக்க போலீசார் ஏற்பாடு செய்தனர். அங்கு டி.ஆர்.ஓ., சாந்தகுமாரிடம் மனு வழங்கினர்.