ADDED : செப் 26, 2025 01:21 AM
அந்தியூர், ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, வருவாய் துறை கூட்டமைப்பு சங்கங்களின் சார்பில், அந்தியூர் தாலுகா அலுவலகத்தில் நேற்று மாலை காத்திருப்பு போராட்டம் நடந்தது. சமூக பாதுகாப்பு திட்ட தாசில்தார் சண்முகசுந்தரம், மண்டல துணை வட்டாட்சியர் பிரகாஷ் முன்னிலை வகித்தனர். அந்தியூர் தாசில்தார் கவியரசு தலைமை விகித்தார்.
அந்தியூர் கிராம நிர்வாக அலுவலர்கள் சங்க தலைவர் முருகேசன், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். உங்களுடன் ஸ்டாலின் திட்ட முகாம் மனுக்களை முடிக்க, காலஅவகாசம் வேண்டும். நில அளவையர்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்பது உள்பட ஒன்பது அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, கிராம நிர்வாக அலுவலர், அலுவலக பணியாளர் உள்ளிட்ட, 30-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.