ADDED : அக் 19, 2025 02:22 AM
கோபி: நலன் காக்கும் ஸ்டாலின் திட்ட மருத்துவ முகாம், கோபி வைரவிழா மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நேற்று நடந்தது. ஈரோடு கலெக்டர் கந்தசாமி பங்கேற்றார். மாற்றுத்திறனாளிகள், ௧௧ பேருக்கு அடையாள அட்டை, ௨௦ கர்ப்பிணிகளுக்கு, ஊட்டச்சத்து பெட்டகம் என, 37 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவி வழங்கினார்.
நிகழ்வில் கோபி சப்-கலெக்டர் சிவானந்தம், மாவட்ட சுகாதார அலுவலர் அருணா உட்பட பலர் பங்கேற்றனர். அப்போது காசநோய் பிரிவின் நலக்கல்வியாளர் சிவக்குமார், புகையிலை பொருட்கள் பயன்பாட்டால் ஏற்படும் விளைவுகள் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.


