/உள்ளூர் செய்திகள்/ஈரோடு/ தண்டவாளம் அருகில் கிடந்த வாலிபர் சாவு தண்டவாளம் அருகில் கிடந்த வாலிபர் சாவு
தண்டவாளம் அருகில் கிடந்த வாலிபர் சாவு
தண்டவாளம் அருகில் கிடந்த வாலிபர் சாவு
தண்டவாளம் அருகில் கிடந்த வாலிபர் சாவு
ADDED : செப் 24, 2025 01:19 AM
ஈரோடு : பீகார் மாநிலத்தை சேர்ந்தவர் சத்தீஸ்வர் முக்யா, 35; கடந்த, 22ம் தேதி காலை, சங்ககிரியில் தண்டவாளம் அருகே ரயிலில் அடிபட்ட நிலையில் கிடந்தார்.
ஈரோடு ரயில்வே போலீசார் மீட்டு சேலம் மருத்துவ கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த நிலையில் நேற்று இறந்தார்.இறந்த முக்யாவின் பேண்ட் பாக்கெட்டில் ஆதார் அட்டை இருந்தது. அதன் அடிப்படையில் பெயர், முகவரி தெரிய வந்தது. ரயிலில் இருந்து விழுந்தாரா? அல்லது தண்டவாளத்தை கவனக்குறைவாக கடந்தபோது ரயில் மோதியதா? என போலீசார் விசாரிக்கின்றனர்.