/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ 15 தலைமைக் காவலர்கள் எஸ்.எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு 15 தலைமைக் காவலர்கள் எஸ்.எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு
15 தலைமைக் காவலர்கள் எஸ்.எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு
15 தலைமைக் காவலர்கள் எஸ்.எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு
15 தலைமைக் காவலர்கள் எஸ்.எஸ்.ஐ.,களாக பதவி உயர்வு
ADDED : ஜூன் 14, 2024 07:00 AM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் தலைமைக் காவலர்கள் 15 பேருக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளித்து எஸ்.பி., உத்தரவிட்டுள்ளார்.
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் சட்டம், ஒழுங்கு உட்பட பல்வேறு காவல் நிலையங்களில் 10 ஆண்டுகளாக தலைமைக் காவலராக பணிபுரிந்த 15 பேருக்கு சிறப்பு சப் இன்ஸ்பெக்டராக பதவி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, சட்டம், ஒழுங்கு காவல் நிலையங்களான கச்சிராயபாளையத்தில், பெரியநாயகம் டோம்னிக், மூங்கில்துறைப்பட்டில் தாமோதரன்.
கள்ளக்குறிச்சியில் வினய்ஆனந்த், வெங்கடேசன், பாஸ்கர், சங்கராபுரத்தில் ரவி, சின்னசேலத்தில் சக்திவேல், செந்தில்குமார், செல்வராஜ், எலவனாசூர்கோட்டையில் கோவிந்தராசு, செந்தமிழ்ச்செல்வன்.
வடபொன்பரப்பியில் வைத்தியலிங்கம், திருக்கோவிலுாரில் அன்வர்பாஷா, நெடுஞ்சாலை ரோந்து பிரிவில் தாமஸ், விழுப்புரம் சரக ஒழுங்கமைக்கப்பட்ட குற்ற புலனாய்வு பிரிவில் தேவேந்திரன் ஆகியோர் சிறப்பு சப் இன்ஸ்பெக்டர்களாக பதவி உயர்வு அளித்து எஸ்.பி., சமய்சிங்மீனா உத்தரவிட்டுள்ளார்.