/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/முதல்வரிடம் காங்., மாநில நிர்வாகி மனுமுதல்வரிடம் காங்., மாநில நிர்வாகி மனு
முதல்வரிடம் காங்., மாநில நிர்வாகி மனு
முதல்வரிடம் காங்., மாநில நிர்வாகி மனு
முதல்வரிடம் காங்., மாநில நிர்வாகி மனு
ADDED : ஜூலை 08, 2024 12:33 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் திருக்கோவிலூர் புது காலனி காட்டு மாதா கோயில் தெருவை சேர்ந்தவர் மலைய ராஜா. இவர், தமிழக காங்கிரஸ் எஸ்.சி., பிரிவு மாநில பொதுச் செயலாளராக இருந்து வருகிறார். இவர், முதல்வர் ஸ்டாலினுக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:
எங்கள் ஊரைச் சேர்ந்த வடமலையனூர் மந்தகரை தெருவில் வசிக்கும் ராஜேந்திரனுக்கும், எனக்கும் நிலம் சம்பந்தமாக பிரச்னை கடந்த 15 வருடங்களாக இருந்து வருகிறது. நாங்கள் வசிக்கும் நிலத்தை அபகரிக்கும் நோக்கத்துடன் என்னையும், எனது தந்தை வேளாங்கண்ணி, தம்பி டேவிட் ராஜா ஆகிய மூவரையும் ராஜேந்திரனின் தூண்டுதலின் பேரில் 10 பேர் எங்கள் மீது தாக்குதல் நடத்தி கொலை மிரட்டல் விடுத்தனர்.
அவர்கள் மீது திருக்கோவிலூர் போலீஸ் ஸ்டேஷனில் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை. இது தொடர்பாக தமிழக அரசின் எஸ்.சி., எஸ்.டி. , மாநில ஆணையத்தில் புகார் அளித்ததின் பேரில் ராஜேந்திரன் மற்றும் அவரது கூட்டாளிகள் மீது போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து முதல் தகவல் அறிக்கையும் பதிவு செய்யப்பட்டது. ஆனால் இதுவரை போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை. கொலை மிரட்டல் விடுத்தவர்கள் மீது சட்ட நடவடிக்கை எடுத்து, எனது குடும்ப உறுப்பினர்களுக்கு பாதுகாப்பிற்கும் வழிவகை செய்ய வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறியுள்ளார்.