Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மனநல காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு

மனநல காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு

மனநல காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு

மனநல காப்பகத்தில் அதிகாரிகள் ஆய்வு

ADDED : ஜூலை 08, 2024 05:19 AM


Google News
Latest Tamil News
கள்ளக்குறிச்சி: ஆலத்துார் புனித அன்னாள் மனநல காப்பகத்தில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நலத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

இக்காப்பகத்தில் மனநலம் பாதிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் 34 ஆண்கள், 16 பெண்கள் உள்ளனர். கலெக்டர் பிரசாந்த் உத்தரவின் பேரில் மாவட்ட மாற்றுத் திறனாளிகள் நல அலுவலர் சுப்ரமணி தலைமையில் முட நீக்கியல் வல்லுநர் பிரபாகரன் உள்ளிட்ட குழுவினர் காப்பகத்தில் ஆய்வு செய்தனர்.

ஆய்வின்போது, மனநலம் பாதிக்கப்பட்டவர்கள் பராமரிக்கப்படும் விதம், சுகாதாரம் குறித்து பார்வையிட்டு கேட்டறிந்தனர்.

மேலும், அவர்களுக்கு வழங்கப்படும் பயிற்சிகள், உணவின் தரம், சுற்றுப்புற துாய்மை, மருத்துவ சிகிச்சை மற்றும் பாதுகாப்பு குறித்தும் ஆய்வு மேற்கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us