ADDED : ஜூன் 13, 2024 09:47 PM
தியாகதுருகம் : தியாகதுருகத்தில் கூழாங்கல் கடத்திய லாரியை பறிமுதல் செய்த போலீசார் ஒருவரை கைது செய்தனர்.
தியாகதுருகத்தில் நான்கு வழிச் சாலையில் வி.ஏ.ஓ., ராஜதுரை வாகன சோதனையில் ஈடுபட்டார். அப்போது அந்த வழியாக வந்த லாரியை சோதனை செய்ததில், 3 யூனிட் கூழாங்கற்கள் கடத்தி வந்தது தெரியவந்தது. உடன், லாரியை தியாகதுருகம் காவல் நிலையம் கொண்டு சென்று புகார் அளித்தார்.
வழக்கு பதிவு செய்த போலீசார், லாரியின் உரிமையாளரான திருக்கோவிலுார் அடுத்த கல்லமேடு கிராமத்தைச் சேர்ந்த சம்பந்தமூர்த்தி, 55; மற்றும் லாரி டிரைவரான விருத்தாசலம் அடுத்த கோபுராபுரம் முத்துசாமி மகன் பாலாஜி, 25; ஆகியோர் மீது வழக்குப் பதிந்து, பாலாஜியை கைது செய்தனர்.