Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய வரும் 30ம் தேதி வரை காலஅவகாசம்

சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய வரும் 30ம் தேதி வரை காலஅவகாசம்

சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய வரும் 30ம் தேதி வரை காலஅவகாசம்

சர்க்கரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்ய வரும் 30ம் தேதி வரை காலஅவகாசம்

ADDED : ஜூன் 23, 2024 06:08 AM


Google News
மூங்கில்துறைப்பட்டு: கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு இதுவரை பதிவு செய்யாமல் உள்ள கரும்பை பதிவு செய்யலாம் என ஆலையின் செயலாட்சியர் கண்ணன் கேட்டுக் கொண்டுள்ளார்.

அவரது அறிக்கை:

மூங்கில்துறைப்பட்டில் உள்ள கள்ளக்குறிச்சி-1 கூட்டுறவு சர்க்கரை ஆலை 2023-24ம் ஆண்டு அரவை பருவத்தில் 4.90 லட்சம் மெட்ரிக் டன் அரவை செய்யப்பட்டது. இந்த பருவத்தில் மட்டும் கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் 21 ஆயிரம் மெட்ரிக் டன் கரும்பு அறுவடை செய்யப்பட்டது.

மேலும், 2024-25ம் ஆண்டின் அரவை பருவத்திற்கு கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலையில் முழு அரவைத் திறனான 4.30 மெட்ரிக் டன் என்ற இலக்கை அடைய வேண்டியுள்ளது.

அதில் கடந்த மே 31ம் தேதி வரை 10 ஆயிரத்து 240 ஏக்கர் கரும்பு பதிவு செய்யப்பட்டு 3.40 லட்சம் மெட்ரிக் டன் கரும்பு அரவை செய்ய திட்டமிட்டப்பட்டுள்ளது.

மேலும் ஆலைப் பகுதி தெற்கு, கடுவனுார், சங்கராபுரம், அரியலுார் தெற்கு, வடக்கு, ஆலைப்பகுதி வடக்கு மற்றும் ஈருடையாம்பட்டு ஆகிய ஏழு கோட்டை பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்துள்ள விவசாயிகள் இதுவரை ஆலைக்கு கரும்பு பதிவு செய்யாதிருந்தால் உடனடியாக கரும்பு பதிவு செய்யலாம்.

நடப்பு கரும்பு நடவு பருவத்தில் கரும்பு அறுவடை இயந்திரம் மூலம் கரும்பு அறுவடை செய்ய வசதியாக 4.5 மற்றும் 5 அடி இடைவெளி கொண்ட பார்கள் அமைத்து கரும்பு நடுவு செய்வது அவசியம்.

சர்க்கரை ஆலையில் செயல்படும் விதை உற்பத்தியாளர் குழு மூலம் தரமான கரும்பு விதைகளை பெற்று பயன் பெறலாம். மேலும், புழு தாக்குதலில் இருந்து கரும்பை பாதுகாக்க தேவையான மெட்டாராசியம் மருந்து விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது.

எனவே கள்ளக்குறிச்சி கூட்டுறவு சர்க்கரை ஆலை விவகார எல்லை பகுதிகளில் கரும்பு சாகுபடி செய்து இதுவரை ஆலைக்கு பதிவு செய்யாத கரும்பு வரும் 30ம் தேதிக்குள் பதிவு செய்யலாம்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us