/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவுஇரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு
இரு தரப்பினர் மோதல் 8 பேர் மீது வழக்கு பதிவு
ADDED : பிப் 11, 2024 03:28 AM
கள்ளக்குறிச்சி: தென்சிறுவளூர் கிராமத்தில் இரு தரப்பினருக்கிடையே ஏற்பட்ட மோதல் தொடர்பாக 8 பேர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சின்னசேலம் அடுத்த தென்சிறுவளூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஆனந்தன் மகன் ராஜிவ்காந்தி, 35; அதே பகுதியைச் சேர்ந்தவர் ரத்தினவேல் மகன் வெங்கடேசன். இருவருக்குமிடையே தேர்தல் தொடர்பாக முன்விரோதம் இருந்தது.
கடந்த ஜனவரி 27ம் தேதி இரு தரப்பினருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு தாக்கிக் கொண்டனர்.
இது குறித்து இரு தரப்பினர் அளித்த புகாரின் பேரில், வெங்கடேசன், ரமேஷ், அஜித்குமார், சீரான் மனைவி கசப்பு, ராஜிவ்காந்தி, மணிகண்டன், ரஞ்சித், மாரி ஆகிய 8 பேர் மீது கீழ்குப்பம் போலீசார் வழக்குப்பதிந்தனர்.