/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
தீக்குளிக்க முயன்ற பெண் மீது வழக்கு
ADDED : செப் 25, 2025 11:47 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அண்ணா நகரைச் சேர்ந்தவர் தேவராஜ் மகள் மீனா, 38; இருவடைய வீட்டில் சில தினங்களுக்கு முன் மின மோட்டார் உள்ளிட்ட பொருட்களை அதே பகுதியைச் சேர்ந்த ஒருவர் எடுத்துச் சென்றுள்ளார்.
இது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசில் புகார் செய்தும், உரிய நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி எஸ்.பி., அலுவலகம் முன்பு நேற்று முன்தினம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
உடன் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் அவரை தடுத்து நிறுத்தினர்.
தீக்குளிக்க முயன்றது தொடர்பாக கள்ளக்குறிச்சி போலீசார் மீனா மீது வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.