ADDED : செப் 25, 2025 11:46 PM
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் அரசு மருத்துவக் கல்லுாரி முதல்வரிடம் தகராறு செய்தவர் மீது போலீசார் வழக்குப் பதிந்தனர்.
சிறுமங்கலம் பகுதியைச் சேர்ந்தவர் சுப்புராயப்பிள்ளை மகன் விஜய், 27; இவரது மனைவி அரசு மருத்துவமனையில் மகப்பேறு பிரிவில் உள்நோயாளியாக உள்ளார்.
நேற்று முன்தினம் இரவு 10:40 மணிக்கு மனைவியை பார்க்க சென்றபோது அவரை விடாத செக்யூரிட்டி மற்றும் கல்லுாரி முதல்வர் பவானியிடமும் தகராறு செய்தார்.
புகாரின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் விஜய் மீது வழக்கு பதிந்தனர்.