/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சின்னசேலத்தில் நீதிமன்றம் திறப்பு சின்னசேலத்தில் நீதிமன்றம் திறப்பு
சின்னசேலத்தில் நீதிமன்றம் திறப்பு
சின்னசேலத்தில் நீதிமன்றம் திறப்பு
சின்னசேலத்தில் நீதிமன்றம் திறப்பு
ADDED : செப் 25, 2025 04:41 AM

சின்னசேலம் : சின்னசேலத்தில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற திறப்பு விழா நடந்தது.
சின்னசேலம் பகுதியில் மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்றம் துவங்க திட்டமிடப்பட்டது. இதற்காக, சின்னசேலம் பழைய ஊராட்சி ஒன்றிய அலுவலக கட்டடம் புனரமைத்து அதில் நீதிமன்றம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.
புனரமைப்பு பணிகள் முடிந்ததால், நீதிமன்ற துவக்க விழா நேற்று நடந்தது. நீதிமன்ற தலைமை எழுத்தர் அனுசியா வரவேற்றார். கள்ளக்குறிச்சி மாவட்ட நீதிபதி இருசன் பூங்குழலி தலைமை தாங்கி, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். தொடர்ந்து மாவட்ட உரிமையியல் மற்றும் நடுவர் நீதிமன்ற நீதிபதியாக காந்திபிரியா பொறுப்பேற்றுக் கொண்டார். நிகழ்ச்சியில் கூடுதல் மாவட்ட நீதிபதி சையத் பர்கத்துல்லா, ஒன்றிய சேர்மன் சத்தியமூர்த்தி, துணை சேர்மன் அன்புமணிமாறன், தாசில்தார் பாலகுரு, பி.டி.ஓ.,க்கள் சுமதி, சவுரிராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.