/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம் கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம்
கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம்
கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம்
கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்கள் செயல்பாடு குறித்த ஆய்வு கூட்டம்
ADDED : செப் 25, 2025 04:42 AM

கள்ளக்குறிச்சி | கள்ளக்குறிச்சி வேளாண்மை உற்பத்தியாளர்கள் கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வேளாண் இயந்திரங்களின் செயல்பாடுகள் குறித்த ஆய்வு கூட்டம் நடந்தது.
கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் முருகேசன் தலைமை தாங்கினார்.
துணைப்பதிவாளர்கள் கள்ளக்குறிச்சி சுகந்தலதா, திருக்கோவிலுார் குறிஞ்சிமணவாளன் முன்னிலை வகித்தனர்.
மாவட்டத்தில், பூச்சி மருந்து தெளிக்கும் ட்ரோன், பவர் டிரில்லர், டிராக்டர், டாடா ஏஸ் மற்றும் பெரிய லோடு வாகனம் உள்ளிட்ட இயந்திரங்களை வைத்துள்ள கூட்டுறவு சங்க செயலாளர்களுக்கான ஆய்வு கூட்டம் நடந்தது.
வெளி மார்க்கெட்டில் வசூலிக்கப்படும் வாடகையை விட, கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்களுக்கு குறைந்த வாடகை பணம் வசூலிக்கப்படுகிறது. இதனால், வடகிழக்கு பருவமழை துவங்க உள்ள நிலையில், கூட்டுறவு சங்க வேளாண் இயந்திரங்களை சந்தைப்படுத்த வேண்டும். இவ்வாறு செய்தால் கூட்டுறவு சங்கங்களுக்கு லாபம் கிடைப்பதுடன், விவசாயிகள் பணம் சேமிக்க முடியும் என அறிவுறுத்தப்பட்டது.
குறைந்த நாட்களில் டிராக்டர் மூலம் அதிக லாபம் பெற்ற வி.பி.அகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க செயலாளர் லட்சுமிகாந்தன், டிரைவர் சக்திவேல் ஆகியோரை பாராட்டி பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில், அலுவலக கண்காணிப்பாளர்கள் சசிகலா, சவிதாராஜ், பிரியதர்ஷினி மற்றும் கூட்டுறவு சங்க பணியாளர்கள் பலர் உடனிருந்தனர்.