/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு
நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு முன்னாள் ராணுவ வீரர்கள் பாராட்டு
ADDED : செப் 25, 2025 04:13 AM

திருக்கோவிலுார் : திருக்கோவிலுார் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு பாராட்டு விழா நடந்தது.
திருக்கோவிலுார் மற்றும் சுற்று வட்டார பள்ளிகளில் சிறப்பாக பணியாற்றி, தமிழக அரசு சார்பில் நல்லாசிரியர் விருது பெற்றவர்களுக்கு திருக்கோவிலுார் முன்னாள் முப்படை ராணுவ வீரர்கள் சங்கம் சார்பில் சங்க அலுவலகத்தில் பாராட்டு விழா நடந்தது.
சங்கத் தலைவர் முஜீர்கான் தலைமை தாங்கினார். செயலாளர் கல்யாணகுமார் வரவேற்றார். பொருளாளர் ராமச்சந்திரன் முன்னிலை வகித்தார். விருது பெற்ற திருக்கோவிலுார் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி கணினி ஆசிரியர் பாலமுருகன், அம்மன்கொல்லைமேடு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ரவி, ஜி.அரியூர் அரசு நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் மகாலட்சுமி, ஆலுார் அரசு நடுநிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் செல்வகுமார் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவிக்கப்பட்டனர்.
ஓய்வு பெற்ற ராணுவ வீரர்கள் ஜோசப், மணி, சீனிவாசன், பன்னீர்செல்வம், சம்பத், கங்காதரன், பத்மநாபன், பாரிவள்ளல் உள்ளிட்ட முன்னாள் ராணுவ வீரர்கள் பலரும் கலந்து கொண்டனர்.