சின்னசேலம் : சின்னசேலத்தில் மாயமான சிறுமியை போலீசார் தேடி வருகின்றனர்.
சின்னசேலம் பகுதியைச் சேர்ந்த 17 வயது சிறுமி தனது பாட்டியுடன் வசித்து வந்தார். நேற்று முன்தினம் கடைக்கு சென்ற சிறுமி மீண்டும் வீடு திரும்பவில்லை.
இது குறித்து சிறுமியின் பாட்டி அளித்த புகாரின் பேரில் சின்னசேலம் போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.