/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் ஓணம் விழா பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் ஓணம் விழா
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் ஓணம் விழா
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் ஓணம் விழா
பங்காரம் லஷ்மி கலை கல்லுாரியில் ஓணம் விழா
ADDED : செப் 04, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சி அடுத்த பங்காரம் லஷ்மி கலை மற்றும் அறிவியல் கல்லுாரியில் ஓணம் விழா கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லுாரி தலைவர் மணிவண்ணன் தலைமை தாங்கினார். செயலாளர் முருகப்பன், இயக்குனர் சரவணன், பொருளாளர் சாந்தி, ஒருங்கிணைப்பாளர் சிவக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நிகழ்ச்சியில் கல்லுாரி முதல்வர் பழனியம்மாள் பங்கேற்று ஓணம் பண்டிகையின் முக்கியத்துவம் குறித்தும், ஒற்றுமை, சமத்துவம், பகிர்வு ஆகியவற்றை இளைய சமுதாயம் கற்றுக் கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்தி பேசினார். நிகழ்ச்சியில் கல்லுாரி பெண் பேராசிரியர்கள், மாணவிகள் பூக்கோலம் வரைந்து வழிபட்டனர். கல்லுாரி துணை முதல்வர் சக்திவேல் நன்றி கூறினார்.