/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
கல்லுாரி மாணவர்களுக்கு தமிழ் கனவு நிகழ்ச்சி
ADDED : செப் 04, 2025 06:58 AM

கள்ளக்குறிச்சி : கள்ளக்குறிச்சியில் கல்லுாரி மாணவ மாணவிகளுக்கான தமிழ் கனவு நிகழ்ச்சி நடந்தது.
கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகம் சார்பில் தச்சூர் பாரதி மகளிர் கல்லுாரியில் தமிழ் கனவு நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு கலெக்டர் பிரசாந்த் தலைமை தாங்கி குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் முன்னாள் டி.ஜி.பி., சைலேந்திரபாபு சிறப்பு விருந்தினராக பங்கேற்று, கல்வியின் மூலம் வாழ்க்கையில் உயர்வது தொடர்பாக பேசினார்.
நிகழ்ச்சியில் புத்தக கண்காட்சி, நான் முதல்வன், வேலை வாய்ப்பு மற்றும் பயிற்சி, மாவட்ட தொழில் மையம், தாட்கோ, வங்கி கடனுதவி ஆலோசனை போன்ற பல்வேறு அரங்குகள் அமைக்கப்பட்டன.
மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வழிகாட்டி, தமிழ் பெருமிதம் குறித்த கையேடுகள் வழங்கப்பட்டன. அதேபோல் தமிழ் பெருமிதம் குறித்து சிறப்பாக விளக்கம் அளித்த மாணவ மாணவிகளை பாராட்டி பெருமிதச்செல்வி, பெருமிதச்செல்வன் என பட்டம் சூட்டி சான்றிதழ் மற்றும் பரிசுகள் வழங்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து நடந்த, 'நிறைந்த மனது' நிகழ்ச்சியில் தமிழ் மரபு மற்றும் பண்பாடு குறித்து கலெக்டர் பிரசாந்த், கல்லுாரி மாணவ மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
நிகழ்ச்சியில் டி.ஆர்.ஓ., ஜீவா, பாரதி கல்லுாரி தாளாளர் கந்தசாமி, ஆக்ஸாலிஸ் பள்ளி தாளாளர் பாரத்குமார், செயலாளர் சாந்தி பாரத்குமார், அரசு கல்லுாரி முதல்வர் தர்மராஜா, பாரதி கல்லுாரி முதல்வர் சுபா மற்றும் அரசு அலுவலர்கள், கல்லுாரி மாணவ மாணவிகள் பலர் பங்கேற்றனர்.