/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை
மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை
மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை
மாமுல் கேட்டு மிரட்டியவருக்கு போலீஸ் வலை
ADDED : செப் 24, 2025 06:28 AM
திருக்கோவிலுார் : திருக்கோவிலுாரில் மாமூல் கேட்டு மிரட்டியவர் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.
திருக்கோவிலுார் அடுத்த சந்தப்பேட்டை, ஜீவா நகரை சேர்ந்தவர் ரங்கநாதன் மகன் முருகன், 30; தனியார் பைனான்ஸ் ஊழியர். நேற்று முன்தினம் தனது நண்பர் கார்த்தியுடன் பைக்கில் புறப்பட்டார்.
அதே பகுதியைச் சேர்ந்த ராஜேந்திரன் மகன் கலைதாசன், 28; இந்த ஏரியாவில் எனக்குத் தெரியாமல் எப்படி குடும்பம் வந்தீர்கள், இங்கு தங்கினால் எனக்கு மாமுல் தர வேண்டும் என கேட்டு தாக்கி கொலை மிரட்டல் விடுத்தார்.
இது குறித்து முருகன் கொடுத்த புகாரின் பேரில் கலைதாசன் மீது போலீசார் வழக்கு பதிந்து தேடி வருகின்றனர்.