/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு
உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு
உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு
உளுந்துார்பேட்டை கந்தசாமிபுரத்திற்கு கருணாநிதி பெயர் வைக்க எதிர்ப்பு
ADDED : செப் 24, 2025 06:32 AM

உளுந்துார்பேட்டை : உளுந்துார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கந்தசாமிபுரம் பெயரை மாற்ற அ.தி.மு.க., வினர் மற்றும் பொதுமக்கள் எதிர்ப்பு தெரிவித்து நகராட்சி ஆணையரிடம் மனு அளித்தனர்.
உளுந்துார்பேட்டை நகராட்சிக்கு உட்பட்ட கிழக்கு மற்றும் மேற்கு கந்தசாமிபுரம் பகுதியில், 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. ஆளும் கட்சியினர் கிழக்கு கந்தசாமிபுரம் என்ற பெயரை மாற்றி முன்னாள் முதல்வர் கருணாநிதி நகர் என பெயர் வைக்க திட்டமிட்டு உளுந்துார்பேட்டை - விருதாச்சலம் சாலையில் ஆர்ச் கட்ட ஏற்பாடு செய்து கட்டுமான பணியை துவங்கினர்.அதற்கு அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், கட்டுமான பணி கைவிடப்பட்டது.
தொடர்ந்து மேற்கு கந்தசாமிபுரம் பகுதிக்கு கருணாநிதி பெயர் வைக்க, உளுந்துார்பேட்டை - விழுப்புரம் சாலை நாராயணன் தியேட்டர் எதிரே ஆர்ச் கட்டுமான பணி நடந்து வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அ.தி.மு.க.,வினர் எதிர்ப்பு தெரியவித்தனர். அ.தி.மு.க., நகர செயலாளர் துரை தலைமையில் பொதுமக்கள், நகராட்சி கமிஷனர் புஷ்ராவிடம், கந்தசாமிபுரம் என்ற பெயரை மாற்ற கூடாது என கோரிக்கை மனு அளித்தனர். பரிசீலனை செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். அதைத் தொடர்ந்து, அ.தி.மு.க. வினர் கலைந்து சென்றனர்.