/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புறவழிச்சாலையில் உடைந்த சென்டர் மீடியன் சீரமைப்பு புறவழிச்சாலையில் உடைந்த சென்டர் மீடியன் சீரமைப்பு
புறவழிச்சாலையில் உடைந்த சென்டர் மீடியன் சீரமைப்பு
புறவழிச்சாலையில் உடைந்த சென்டர் மீடியன் சீரமைப்பு
புறவழிச்சாலையில் உடைந்த சென்டர் மீடியன் சீரமைப்பு
ADDED : மே 29, 2025 01:29 AM

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில் சென்டர் மீடியன் உடைந்த இடம் சீரமைக்கப்பட்டது.
கள்ளக்குறிச்சி புறவழிச்சாலையில், ஏமப்பேர் மும்முனை சந்திப்பில் இருந்து கோமுகி ஆற்றுப்பாலம் வரை, 2 கி.மீ., தொலைவுக்கு சாலையின் நடுவே சென்டர் மீடியன் தடுப்புச்சுவர் கட்டப்பட்டது.
இங்கு அதிகளவில் விபத்துகள் நடக்கும் என்பதால், சென்டர் மீடியன் தடுப்புச்சுவர் இடைவெளியின்றி அமைக்கப்பட்டது.
இதனால், சாலையின் குறுக்கே கடந்து, எதிர்ப்புற சாலைக்கு செல்ல முடியாமல் வாகன ஓட்டிகள் சிரமமடைந்தனர். இந்நிலையில் ஏமப்பேர் மேம்பாலம் அருகே சென்டர் மீடியன் தடுப்புச்சுவரை உடைத்து தற்காலிகமாக வழி ஏற்படுத்தப்பட்டது.
இதில் கார், பைக் உள்ளிட்ட வாகனங்கள் புறவழிச்சாலையின் குறுக்கே சென்றன. இந்நிலையில் சேலத்தில் இருந்து உளுந்துார்பேட்டை மார்க்கமாக செல்லும் வாகனங்கள், மேம்பாலம் இறங்கும் பகுதியில் அதிவேகமாக செல்வதால், சாலையின் குறுக்கே கடக்கும் வாகனங்கள் மீது மோதி விபத்து ஏற்படும் அபாயம் இருந்தது.
புறவழிச்சாலையில் கடந்த 2 வாரங்களில் நடந்த சாலை விபத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் உட்பட 2 பேர் உயிரிழந்தனர்.
அதனால் விபத்தை தடுக்கும் பொருட்டு, சாலையின் குறுக்கே வாகனங்கள் கடந்து செல்லாமல் இருக்க சென்டர் மீடியன் உடைக்கப்பட்ட இடத்தில் மண் கொட்டி, நேற்று சமன்படுத்தப்பட்டது.


