/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவால் அதிர்ச்சி புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவால் அதிர்ச்சி
புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவால் அதிர்ச்சி
புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவால் அதிர்ச்சி
புதிய நீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிவால் அதிர்ச்சி
ADDED : மே 29, 2025 01:35 AM

கள்ளக்குறிச்சி: காட்டனந்தல் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட மேல்நிலைநீர்தேக்க தொட்டியில் தண்ணீர் கசிந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த காட்டனந்தல் கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வசிக்கின்றனர்.
இவர்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் வகையில், ரூ.20 லட்சம் மதிப்பில் 60 ஆயிரம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி கட்டப்பட்டது.
பணிகள் முடிந்து பல மாதங்களாகியும் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி பயன்பாட்டிற்கு வராமல், காட்சி பொருளாகவே இருந்தது.
மேல்நிலை நீர்தேக்க தொட்டியை பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.
இதையடுத்து, சோதனை பணிக்காக மேல்நிலை நீர்த்தேக்க தொட்டிக்கு நீரேற்றம் செய்யும் பணி நேற்று நடந்தது. உடன், சில மணி நேரங்களிலேயே மேல்நிலை நீர்த்தேக்க தொட்டியில் இருந்து தண்ணீர் கசிந்ததால் மக்கள் அதிர்ச்சியடைந்தனர்.
தகவலறிந்த கள்ளக்குறிச்சி வட்டார வளர்ச்சி அதிகாரிகள், சம்பவ இடத்துக்கு சென்று ஆய்வு மேற்கொண்டு, தொட்டியில் தண்ணீர் கசிந்த இடத்தை தற்காலிகமாக சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர். இந்த பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.