/உள்ளூர் செய்திகள்/கள்ளக்குறிச்சி/ சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
சாலை ஆக்கிரமிப்பால் போக்குவரத்து பாதிப்பு
ADDED : மே 29, 2025 01:34 AM

உளுந்துார்பேட்டை: உளுந்துார்பேட்டையில் போக்குவரத்து பாதிப்பால் வாகன ஓட்டிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.
உளுந்துார்பேட்டை பகுதி சென்னை, சேலம், திருச்சி, மதுரை, திருவண்ணாமலை, வேலுார், கடலுார் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு வாகன போக்குவரத்துக்கான முக்கியத்துவம் வாய்ந்த மையப் பகுதியாக உள்ளது. இதனால் இங்கு, 24 மணி நேரமும் வாகன போக்குவரத்து காணப்படுகிறது.
இந்நிலையில் உளுந்துார்பேட்டை பஸ் நிலையத்தில் இருந்து வெளியேறும் பஸ்கள் சென்னை, திருவெண்ணைய்நல்லுார் மற்றும் திருச்சி செல்லும் சாலைகளில், சமீப காலமாக ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன.
இதனால் அந்த பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது.
இந்த கடைகளுக்கு வருவோர், சாலையிலேயே வாகனங்களை நிறுத்துவதால், போக்குவரத்து பாதிப்பு தொடர்கதையாகி வருகிறது. இது குறித்து போக்குரவத்து போலீசாரும் கண்டு கொள்வது கிடையாது. இதனால் அப்பகுதியில் விபத்து அபாயம் அதிகரித்துள்ளது.
இது குறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ' போக்குவரத்து நெரிசலால் மாணவர்கள், முதியவர்கள், குழந்தைகள், பெண்கள் உள்ளிட்டோர் கடும் பாதிப்பிற்குள்ளாகி வருகின்றனர். இந்த சாலையில், ஆம்புலன்ஸ் வாகனங்கள், கடும் நெருக்கடியை சந்தித்து வருகின்றன.
அதனால் போக்குவரத்து போலீசார் வாகனங்களை ஒழுங்குப்படுத்தி போக்குவரத்துக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும், நகராட்சி நிர்வாகம், நெடுஞ்சாலைத் துறையினர் உள்ளிட்டோர், சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி வாகனங்கள் எளிதில் செல்லும் வகையிலும், போக்குவரத்து பாதிப்புக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் நிரந்தர தீர்வு காண வேண்டும்,'என்றனர்.