/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ உத்திரமேரூர் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி உத்திரமேரூர் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
உத்திரமேரூர் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
உத்திரமேரூர் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
உத்திரமேரூர் விவசாயிகளுக்கு உணவு பாதுகாப்பு பயிற்சி
ADDED : ஜூலை 31, 2024 12:51 AM
காஞ்சிபுரம்:தேசிய வேளாண்மை நிறுவனம் சார்பில், உத்திரமேரூர் ஒன்றியம் காரணை கிராமத்திலுள்ள உழவர் உற்பத்தியாளர் நிறுவன வளாகத்தில், உணவு பாதுகாப்பு குறித்து நேற்று, விவசாயிகளுக்கு ஒரு நாள் பயிற்சி வகுப்பு நடந்தது.
தேசிய வேளாண்மை நிறுவன முதன்மை தொழில்நுட்ப மேலாளர் ஷைலா ரவி தலைமை வகித்து, விவசாயிகளுக்கு பயிற்சி அளித்தார். இதில், விவசாயிகள் உற்பத்தி செய்யும் உணவுப்பொருட்களை எவ்வாறு பாதுகாப்பாக சேமித்து வைப்பது என்பது குறித்து, பல்வேறு ஆலோசனைகள் வழங்கினார்.
மேலும் உணவு பாதுகாப்பின் போது ஏற்படும் இடர்பாடுகளை எவ்வாறு தீர்ப்பது, சுற்றுப்புற துாய்மை, சுகாதாரம் பேணி காத்தல் குறித்து விளக்கம் அளித்தார்.
இதில், உத்திரமேரூர் உழவர் உற்பத்தியாளர் நிறுவன தலைவர் சோழனுார் மா.ஏழுமலை மற்றும் திரளான விவசாயிகள் பங்கேற்றனர். பயிற்சியில் பங்கேற்ற விவசாயிகளுக்கு, தேசிய வேளாண் நிறுவனம் சார்பில் சான்றிதழ் வழங்கப்பட்டது.