ADDED : ஜூலை 24, 2024 11:12 PM
வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றியம், புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்தவர் வெங்கடேசன், 58; இவர், அப்பகுதியில் உள்ள உறவினர் இறந்ததற்கான இறுதி சடங்கில் நேற்று முன்தினம் மாலை பங்கேற்றார்.
அப்போது அங்கு வந்த புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த எழில், 45 மற்றும் அவரது நண்பர்கள் முன் விரோதம் காரணமாக கூட்டாக சேர்ந்து வெங்கடேசனை தாக்கியதாக கூறப்படுகிறது.
இதுகுறித்து, வெங்கடேசன் அளித்த புகாரின்படி, புளியம்பாக்கம் கிராமத்தைச் சேர்ந்த பாரத், 45; எழில் 30 மற்றும் பழையசீவரம் பகுதியைச் சேர்ந்த பிரவீன், 29, ஆகிய மூன்று பேரையும் வாலாஜாபாத் போலீசார் கைது செய்து நேற்று, காஞ்சிபுரம் நீதிமன்ற காவல் சிறையில் அடைத்தனர்.