/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி 7 பேர் கைது; 8 பேருக்கு வலை 'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி 7 பேர் கைது; 8 பேருக்கு வலை
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி 7 பேர் கைது; 8 பேருக்கு வலை
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி 7 பேர் கைது; 8 பேருக்கு வலை
'டிஜிட்டல் அரெஸ்ட்' மோசடி 7 பேர் கைது; 8 பேருக்கு வலை
ADDED : செப் 26, 2025 02:34 AM

காஞ்சிபுரம் சென்னையில் பதுங்கி, 'ஆன்லைன்' வாயிலாக, 'டிஜிட்டல் அரெஸ்ட்' செய்து பணம் பறிப்பில் ஈடுபட்டு வந்த ஏழு பேரை, காஞ்சிபுரம் மாவட்ட, சைபர் குற்றப்பிரிவு போலீசார் கைது செய்துள்ளனர்.
காஞ்சிபுரம் அருகே, சிறுகாவேரிப்பாக்கத்தைச் சேர்ந்த ராஜேந்திரன், 62. இவரின் மொபைல் போனுக்கு, கடந்த ஜூலை, 25ம் தேதி மர்ம நபர் பேசி உள்ளார்.
அப்போது, உங்கள் மகன் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு இருப்பதாக, ஆன்லைன் வாயிலாக, டிஜிட்டல் கைது செய்து, ஐந்து லட்சம் ரூபாய் பறிக்க முயன்றுள்ளார்.
சுதாரித்த ராஜேந்திரன் காஞ்சிபுரம் சைபர் குற்றப்பிரிவு போலீசில் புகார் அளித்துள்ளார். விசாரணையில், சென்னை கானத்துாரில், அடுக்குமாடி குடியிருப்பில் தங்கி உள்ள மர்ம நபர்கள், ஒரே நேரத்தில் நுாற்றுக்கும் மேற்பட்டோருக்கு குறுஞ்செய்தி அனுப்பும், 'சிம் பாக்ஸ்' உடன் பதுங்கி இருப்பது தெரியவந்தது.
அங்கு ரகசியமாக கண்காணித்து, ராமநாதபுரத்தைச் சேர்ந்த ஹபீப்நைனா, 41, சென்னை வில்லிவாக்கம் சரத்குமார், 28, தஞ்சாவூர் வினோத், 31, உட்பட ஏழு பேரை கைது செய்துள்ளனர். இதில், எட்டு பேர் தலைமறைவாக உள்ளனர். இவர்களில், ஐந்து பேர் மலேஷியாவைச் சேர்ந்தவர்கள்.
கைதான நபர்களில் இருவர் மீது குண்டர் தடுப்பு சட்டமும் பாய்ந்துள்ளது.