/உள்ளூர் செய்திகள்/காஞ்சிபுரம்/ திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல் திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
திட்ட பணிகளை விரைந்து முடிக்க கலெக்டர் அறிவுறுத்தல்
ADDED : செப் 25, 2025 12:54 AM

வாலாஜாபாத்:வாலாஜாபாத் ஒன்றிய ஊராட்சிக ளில் நடைபெறும் அரசு திட்டப் பணிகள் குறித்து நேற்று ஆய்வு செய்த காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி பணிகளை விரைவாக முடிக்க அறிவுறுத்தினார்.
வாலாஜாபாத் ஒன்றியம், ஊத்துக்காடில் 15வது மாநில நிதிக்குழு மானியத்தின் கீழ், 41 லட்சம் ரூபாய் செலவில் புதியதாக துணை ஆரம் ப சுகாதார நிலையம் கட்டப்படுகிறது.
இப்பணிகளின் தரம் குறித்து காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி நேற்று நேரில் சென்று ஆய்வு செய்தார்.
அப்போது, ஊராட்சியில் திடக்கிழவு மேலாண்மை திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் ப ணிகள் குறித்து கேட்டறிந்தார்.
மேலும், ஊத்துக்காடு ஊராட்சியில் பழங்குடியினர் குடும்பங்களுக்கான வீட்டு பணிகளை பார்வையிட்டார்.
தொடர்ந்து, நாய்க்கன் குப்பம் ஊராட்சியில், காஞ்சிபுரம் தி.மு.க., - எம்.பி., தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ் 40 லட்சம் ரூபாயில் புதிதாக கட்டப்படும் சமுதாயக்கூடத்திற்கான கட்டுமானப் பணிகளை பார்வையிட்ட அவர் பணியை விரைந்து முடிக்க அறிவுறுத்தினார்.
இதையடுத்து, கட்டவாக்கம் ஊராட்சியில் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் கட்டப்படும் வீடுகளுக்கான கட்டுமானத்தை ஆய்வு செய்தார்.
மேலும், கட்டவாக்கத்தில் மஹாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்டத்தின் கீழ், 20.58 லட்சம் ரூபாய் செலவில் பராமரிக்கப்படும் நாற்றங்கால் பண்ணையை பார்வையிட்டார். அங்கு வளர்க்கப்படும் மரக்கன்றுகள் மற்றும் அதன் வளர்ச்சி, பயன்பாடு போன்றவை குறித்து அதிகாரிகளிடத்தில் கேட்டறிந்தார்.